பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
சல்மான் கானும் ஐஸ்வர்யா ராயும் அம் தில் தே சுகே சனம் படத்தில் இணைந்து நடிக்கும் பொழுது இருவரும் நெருங்கி பழகியது பலருக்கு தெரிந்த விஷயமே. ஆனால் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா ராயுடன் நடிகை சோனம் கபூரை ஒப்பிட்டு பேசியுள்ளார் சல்மான் கான்.
தீபாவளி விருந்தாக திரைக்கு வர காத்திருக்கும் பிரேம் ரத்தன் தான் பயோ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின் போது நடிகை சோனம் கபூர், “எல்லோரும் என்னையும் ஐஸ்வர்யா ராயையும் ஒப்பிட்டு பேசுகின்றனர். ஆனால் நான் ஐஸ் அளவிற்கு அழகில்லை என்பதே உண்மை” என்று அவர் பேசினார். உடனே மைக்கை பிடுங்கிய சல்மான், “இல்லை ஐஸ்வர்யா ராய் அளவிற்கு நீயும் அழகு தான்” என மேடையிலே ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்து சிக்கலில் மாட்டிக்கொண்டார். மேலும் தான் நடித்ததிலே மிகவும் அழகான படமாக பிரேம் ரத்தன் அமையும் என்று பேச்சின் திசையையும் திருப்பிக்கொண்டார். சல்மான் இது சரியா?