பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
இன்று உலகநாயகன் கமலுக்கு பிறந்த தினமாக அமைந்தது போல, இந்திய சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் முதல் நடித்த, அவரது திரையுலக வாழ்க்கையை துவக்கி வைத்த 'சாட் ஹிந்துஸ்தானி' படம் வெளியான நாளாகவும் (07.11.1969) அமைந்துவிட்டது.. இந்தப்படத்தில் மலையாள நடிகரான மது (தர்மதுரையில் ரஜினியின் தந்தையாக நடித்தவர்) ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அமிதாப்புடன் இணைந்து நடித்திருந்தார்.. அந்த நேரத்தில் மலையாளப்படங்களில் பிஸியான ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தவர் மது.
இன்று அந்த 'சாட் ஹிந்துஸ்தானி' படம் ரிலீஸான தினம். அதனால் அந்தப்படத்தை பற்றி அமிதாப்பச்சனுக்கு நினைவூட்டும் வகையில் இஸ்ரேலை சேர்ந்த அமிதாப்பின் ரசிகரும் மீடியாவில் பணிபுரிபவருமான மோசஸ் சபீர் என்பவர் அமிதாப்பின் ட்விட்டர் பக்கத்தில் அந்தப்படத்தின் புகைப்படம் ஒன்றை இணைத்திருந்தார். அத்துடன் அதில் நடித்திருந்தவர்கள் பெயரை குறிப்பிடும்போது, நடிகர் மதுவை, மதன் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதற்கு ரீட்வீட் பண்ணிய அமிதாப், அவர் பெயர் 'மதன்' அல்ல.. மது என திருத்தியிருந்தார்.. இத்தனை வருடம் கழித்தும் தனது முதல்பட மலையாள நண்பனை அவர் மறக்காமல் ஞாபகப்படுத்தியது மலையாள ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.