அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நடிகர் விஷாலுக்கு ஜோடியாக பாயும் புலி படத்தில் நடித்த காஜல் அகர்வால் டோலிவுட்டில் நடிகர் மகேஷ் பாபுவின் பிரம்மோற்சவம், பவர் ஸ்டார் பவன் கல்யாணின் சர்தார் படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இதில் பிரம்மோற்சவம் படப்பிடிப்பில் பிசியான காஜல் இனி பவன் கல்யாணுடன் டூயட் பாட தயாராகி வருகின்றார். கபார் சிங் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் சர்தார் கபார் சிங் படத்தை இயக்குனர் பாபி இயக்கத்தில் ஈரோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாந்த் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் பவன் கல்யாண் நடிக்கும் இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது. சர்தார் படத்திற்காக இதுவரை வில்லன்களுடன் மோதிய பவன் கல்யாண் அடுத்து காஜலுடன் காதல் செய்யவுள்ளார். நடிகை காஜல் அகர்வால் வரும் நவம்பர் 17 ஆம் தேதி முதல் சர்தார் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காஜல் பவன் கல்யாண் சம்மந்தப்பட்ட சர்தார் படத்தின் படப்பிடிப்பை வடடொரவில் நடத்தவுள்ளதாக படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன.