Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ்நாட்டில் அஜித் கிங், அமெரிக்காவில் கமல் கிங்!

06 நவ, 2015 - 13:43 IST
எழுத்தின் அளவு:
Ajith-king-in-Tamilnadu---Kamal-king-in-USA

தங்களின் அபிமான நடிகரின் படம் வெளிவருவதால் தீபாவளிக் கொண்டாட்டத்திற்காக தயாராகி வருகிறார்கள் அஜித் மற்றும் கமல்ஹாசன் ரசிகர்கள். அஜித்தின் 'வேதாளம்' மற்றும் கமலின் 'தூங்காவனம்' ஆகிய படங்கள் தீபாவளியன்று உலகமெங்கும் வெளியாகின்றன. கமல் என்னதான் சீனியர் நடிகர் என்றாலும் அவரைவிட அஜித்துக்குத்தான் இன்றைய தேதியில் மாஸ் அதிகம்.


கமலைவிட மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கே உண்டு. தவிர, அனைத்து தரப்பினரும் ரசிக்கத்தக்க படமாகவும், ஏ,பி,சி என மூன்று சென்டர் ரசிகர்களுக்குமான படமாகவும் வேதாளம் இருக்கும் என்று ரசிகர்கள் மட்டுமல்ல தியேட்டர்காரர்களும் நம்புகின்றனர். எனவே தமிழகத்தில் தூங்காவனம் படத்துக்குக் கிடைத்த தியேட்டர்களின் எண்ணிக்கையைவிட வேதாளம் படத்திற்கு அதிக எண்ணிக்கையில் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. 'தூங்காவனம்' படத்திற்கு 300 க்கும் குறைவான தியேட்டர்களும், வேதாளம் படத்திற்கு 550 தியேட்டர்களும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் தமிழ்நாட்டில் அஜித் கிங்காக இருக்கிறார்.


தமிழக நிலவரம் இப்படி என்றால்.... அமெரிக்க நிலவரம் வேறு. உலகஅளவில் தமிழ்நடிகர்களில் ரஜினிக்குத்தான் மிகப்பெரிய மாஸ் இருக்கிறது. அவருக்கு அடுத்த இடத்தில் கமல் இருக்கிறார். எனவே, 'தூங்காவனம்' படம் அமெரிக்காவில் 102 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. அஜித்தின் வேதாளம் 85 தியேட்டர்களில் வெளியாகிறது. இதன்மூலம் அமெரிக்காவில் கமல் தான் கிங்காக இருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in