இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி' படத்தில் துல்கர் சல்மானின் நண்பர்களில் ஒருவராக நடித்தவர் பிரபு லக்ஷ்மன். இவரை buddy பிரபு என்றே பலரும் அழைப்பார்கள். காரணம்... இவர் யாரிடம் பேசினாலும் அவர்களை buddy என்றே அழைப்பார். திரையுலகில் உள்ள பிரபலங்கள் பலருக்கும் நெருக்கமான நண்பரான buddy பிரபு மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம் தம்பதியரின் குடும்ப நண்பர். அந்த அடிப்படையிலேயே ஓகே கண்மணி படத்தில் துல்கர் சல்மானின் நண்பர் வேடத்தில் buddy பிரபுவை நடிக்க வைத்தார் மணிரத்னம்.
தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான நடிகர் நடிகைகளுடனும் இவருக்கு நல்ல நட்பு இருந்து வந்தது. திரையுலகைச் சேர்ந்த யார் பார்ட்டி வைத்தாலும் buddy பிரபுவை அழைக்க மறக்க மாட்டார்கள். காரணம்... அவர் பார்ட்டிக்கு வந்தால் பார்ட்டியே களைகட்ட ஆரம்பித்துவிடும். பிசினஸ்மேனான buddy பிரபு, திண்டுக்கல்லில் உள்ள PSNA கல்லூரி நிர்வாகிகளில் ஒருவராக இருந்தார். கண்ணுக்கு லேசர் சிகிச்சை எடுத்துக்கொள்ள மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டநிலையில், மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். buddy பிரபுவின் மரணம் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.