Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஞ்சலிக்கு டைரக்டர்கள் போட்ட வாய்ப்பூட்டு!

06 நவ, 2015 - 11:27 IST
எழுத்தின் அளவு:
Director-strictly-says-to-anjali-not-to-share-anything

கற்றது தமிழ் படத்தில் அறிமுகமானவர் அஞ்சலி. அதன்பிறகு நடித்த அங்காடித்தெரு அவரை பிரபலப்படுத்தியது. பின்னர் ஹீரோயிசம் கொண்ட கதைகளில் நடித்த அஞ்சலி கமர்சியல் கதாநாயகி ஆனார். குறிப்பாக சுந்தர்.சியின் கலகலப்பு படத்தில் அயிட்டம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி ஆட்டம் ஆடி அதிர்ச்சி கொடுத்தார். அதையடுத்து குடும்ப சண்டை காரணமாக கோடம்பாக்கத்தை காலி பண்ணிவிட்டு ஆந்திராவில் குடியேறினார்.


ஆனால் அவர் ரீ-என்ட்ரியானபோது, சிங்கம்-2 படத்தில் சூர்யாவுடன் குத்துப்பாட்டுக்குத்தான் ஆடினார். பின்னர் சகலகலா வல்லவன், மாப்ள சிங்கம் படங்களைத் தொடர்ந்து இப்போது ராமின் தரமணி, கார்த்திக் சுப்புராஜின் இறைவி படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படங்களில் அஞ்சலி நடிக்கும் கேரக்டர்கள் ரொம்ப சஸ்பென்சாக உள்ளது. காரணம், அவர் மீடியா பேட்டிகளில் எதையும் மனதில் வைக்காமல் மடைதிறந்தார் போன்று கொட்டி விடுவதால், படம் திரைக்கு வருவதுவரை எந்த விசயத்தையும் லீக்அவுட் செய்து விடக்கூடாது என்று சம்பந்தப்பட்ட பட டைரக்டர்கள் அவருக்கு வாய்ப்பூட்டு போட்டு வைத்துள்ளனர்.


ஆனபோதும், தனது கோலிவுட் நண்பர்களிடம், தரமணி படத்தில் ஆண்ட்ரியா நாயகி என்றபோதும், எனது கதாபாத்திரமும் பேசப்படும். என்னை கற்றது தமிழ் படத்துக்காக தமிழுக்கு அழைத்து வந்தவர் டைரக்டர் ராம். அவர் இப்போது என்னை இந்த தரமணி படத்திலும் ஒரு புதுமையான வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறார். அதேபோல், ஜிகர்தண்டா டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ், நானே நினைத்து பார்த்திராத ஒரு வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறார். அஞ்சலிக்கு இந்த மாதிரியும் நடிக்க தெரியுமா... என்று ரசிகர்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு என்னை புதிய கோணத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதனால், இந்த படங்களுக்குப்பிறகு பர்பாமென்ஸ் நடிகை என்கிற நல்ல முத்திரை என் மீது விழும் என்று கூறி வருகிறார் அஞ்சலி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in