ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மதராசப்பட்டினம் எமி ஜாக்சன் இந்திய படங்களில் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே அவ்வப்போது ஏதாவது ஒரு காதல் கிசுகிசுவில் சிக்கிக்கொண்டே வருகிறார். தமிழில் மதராசப்பட்டினம், தாண்டவம், ஐ படங்களில் நடித்தவர் இந்தியில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நடித்தபோது அந்த பட நாயகன் பிரதீப்பை காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. அதற்கு அடையாளமாக அவரது பெயரை தனது உடம்பில் பச்சைக் குத்திக்கொண்டார் எமி. பின்னர், அவரது காதலை முறித்துக்கொண்டவர், லண்டன் நண்பருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை இணையதளங்களில் வெளியிட்டு அடுத்த பரபரப்பை உருவாக்கினார்.
ஆனால் இப்போது இந்தியில் அக்சய்குமாருடன் சிங் இஸ் பிலிங் படத்தில் நடித்த பிறகு அங்குள்ள இளவட்ட நடிகரான சூரஜ் பஞ்சோலியுடன் எமிஜாக்சன் நெருங்கி பழகி வருவதாக பாலிவுட்டில் செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த செய்திக்கு தற்போது மறுப்பு வெளியிட்டுள்ளார் எமி. அதில், நான் எனக்கு பிடித்த நண்பர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களுடன் நெருங்கி பழகுவேன். அதைப்பார்ப்பவர்களே காதல் என்று கதைகட்டி விடுகிறார்கள். நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. அதனால் என்னைப்பற்றி வெளியான செய்திகள் எல்லாமே வதந்திதான் என்று தெரிவித்துள்ளார் எமிஜாக்சன்.