Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உதயநிதி-ஹன்சிகா படப்பிடிப்பு துவங்கியது

06 நவ, 2015 - 10:46 IST
எழுத்தின் அளவு:
Hansika---Udhay-movie-shooting-begins

விஜய்-த்ரிஷா நடித்த குருவி படத்தில் தயாரிப்பாளர் ஆனவர் உதயநிதி ஸ்டாலின். பின்னர் ஆதவன், ஏழாம் அறிவு, மன்மதன் அம்பு போன்ற படங்களை தயாரித்தவர், ஒரு கல் ஒரு கண்ணாடியில் இருந்து படம் தயாரிப்பதுடன், தானே நாயகனாகவும் அரிதாரம் பூசினார் அவர். தொடர்ந்து இது கதிர்வேலின் காதல், நண்பேன்டா, கெத்து ஆகிய படங்களை தயாரித்து நடித்தவர், இப்போது அகமது இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.


இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அதனால் புரொடக்சன் நம்பர்-10 என்ற பெயரில் படமாக்கி வருகிறார்கள். நேற்று சென்னையிலுள்ள செந்தில் ஸ்டுடியோவில் உதயநிதி-ஹன்சிகா சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகளை படமாக்கப்பட்டது. இன்னும் ஒரு வாரத்திற்கு இதே ஸ்டுடியோவில்தான் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாம்.


மேலும், ஒரு கல் ஒரு கண்ணாடி ஹிட்டுக்குப் பிறகு உதயநிதி-ஹன்சிகா இணையும் இந்த படமும் காதல் சம்பந்தப்பட்ட கதை என்றாலும், இந்த படம் இதுவரை உதயநிதி நடிக்காத வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகிறதாம். அதனால், முந்தைய படங்களில் சாதாரணமாக நடித்து விட்டு சென்ற உதயநிதி, இந்த படத்திற்காக நிறைய ஹோம் ஒர்க் பண்ணி நடிக்கிறாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in