ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு, தெலுங்கு திரை உலகில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். டோலிவுட்டில் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்துள்ள மகேஷ் பாபு நடிப்பில் இறுதியாக வெளிவந்த ஸ்ரீமந்துடு திரைப்படமும் சூப்பர் டூப்பர் வெற்றியைப் பெற்றது. ஸ்ரீமந்துடு படத்திற்கு பின்னர் தற்சமயம் பிரம்மோற்சவம் படத்தில் நடித்து வரும் மகேஷ் பாபு அடுத்து நடிக்கவிருக்கும் படத்தை ஹிந்தியிலும் உருவாக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
பிரம்மோற்சவம் படத்தை முடித்த பின்னர் மகேஷ் பாபு, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் தெலுங்கில் மடுமல்லாது தமிழ் மற்றும் ஹிந்தியிலும் வெளிவரும் என கூறப்படுகின்றது. பல ஹிந்திப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் அதனை ஏற்க மறுத்த மகேஷ் பாபு தற்போது தனது படத்தை ஹிந்தியில் வெளியிட்டு முன்னோட்டம் பார்க்கவுள்ளாராம். ஹிந்தி ரசிகர்களின் வரவேற்பைப் பொறுத்து நேரடி ஹிந்திப் படங்களில் நடிப்பது குறித்து மகேஷ் பாபு முடிவு செய்யவும் திட்டமிட்டுள்ளாராம்.