விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
'குயின்' படத்தில் கிடைத்த வெற்றி, பாராட்டு எல்லாம் 'கட்டி பட்டி' படத்திற்கு கிடைக்காமல் போய்விட்டது. கட்டி பட்டி படம் தோல்வியடைந்ததால் மனதளவில் சற்று பீலிங்கில் இருந்த கங்கனா, இப்போது அந்த சோகத்தை எல்லாம் ஓரம் கட்டி வைத்துவிட்டு அடுத்தப்படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். சமீபத்தில் கங்கனாவை சந்தித்தபோது புதிதாக படம் எதுவும் கமிட்டாகியுள்ளீர்களா.? என்று கேட்டபோது. அதற்கு பதில் அளித்த கங்கனா... சேகர் கபூர் இயக்கவுள்ள புதிய படத்தில், 85வயது பாட்டியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, இன்னும் முடிவாகவில்லை, இது மிகவும் சவாலான வேடம் என்று கூறியுள்ளார். மேலும் சேகர் கபூர் தற்போது இயக்கும் 'பானி' படத்தில் நான் நடிக்கவில்லை என்றும் கூறினார்.
கங்கனா, தற்போது விஷால் பரத்வாஜ் இயக்கும் ''ரங்கூன்'' படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் கங்கனாவுடன் ஷாகித் கபூர் மற்றும் சைப் அலிகான் நடிக்க உள்ளனர்.