ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'வேதாளம்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் படக் குழுவினர் அஜித் ரசிகர்களை ஏமாற்றிவிட்டனர். இப்படத்தை யு.கே.வில் வெளியிடும் ஐங்கரன் நிறுவனம் இன்று 'வேதாளம்' டிரைலர் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார்கள். வழக்கம் போல நள்ளிரவு 12 மணியானதும் டிரைலர் வெளிவரும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் கம்ப்பூட்டர் முன் யு டியூப் இணையதளத்தை திறந்து வைத்துக் கொண்டு காத்திருந்தார்கள். ஆனால், ரசிகர்கள் ஏமாந்து போனதுதான் மிச்சம்.
'வேதாளம்' படத்திற்காக இதுவரை ஒரு பொதுவான டீசரும், இரண்டு பாடல்கள் டீசரும் மட்டுமே வெளியாகியுள்ளது. வெளியீட்டிற்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் இதுவரை டிரைலரை வெளியிட தாமதம் அவது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களைப் பற்றி அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கும் போது டிரைலர் கூட வெளியிடாமல் இருப்பது அஜித் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் இயக்குனர் சிவா ஈடுபட்டிருப்பதால் டிரைலர் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.