தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தை அட்லி இயக்குகிறார், கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமந்தா, எமி ஜாக்சன், மகேந்திரன், ராதிகா நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது.
படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ரஜினி பட தலைப்புகள் இப்போது டிரண்டாக இருப்பதால் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்து கலக்கிய மூன்று முகம் டைட்டில் யோசிக்கப்பட்டது. பின்னர் அது கைவிடப்பட்டு போலீசை குறிக்கும் காக்கி என்ற டைட்டில் ஆலோசிக்கப்பட்டது. அதனை செந்தில்குமார் என்ற இயக்குனர் பதிவு செய்திருக்கிறார்.
அவரிடம் தற்போது டைட்டிலை விட்டுக்கொடுக்க பேச்சு நடந்து வருகிறது. இதுதவிர வெற்றி என்ற டைட்டிலும் பரிசீலனையில் உள்ளது. இந்த மூன்றில் ஒரு தலைப்பு இறுதி செய்யப்படலாம் என்று தெரிகிறது. வருகிற தீபாவளியன்று டைட்டிலுடன் படத்தின் பர்ஸ்ட்லுக்கை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை இயக்குனர் அட்லியும், தயாரிப்பாளர் தாணுவும் செய்து வருகிறார்கள்.