பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீனாட்சி ஹீரோயினாக நடிக்கும் படம் ''நேர்முகம்''. இதனை ரஃபி என்ற இளைஞர் தயாரித்து, ஹீரோவாக நடிக்கிறார். முரளி கிருஷ்ணா இயக்குகிறார். இது தனி பங்களாளில் வசிக்கும் ஒரு சைக்கோ டாக்டரிடம் சிக்கிக் கொள்பவர்களின் கதை. இதில் சைக்கோவிடம் சிக்கும் காதலன், காதலியாக ரஃபியும், மீனாட்சியும் நடித்து வருகிறார்கள்.
இதன் படப்பிடிப்பு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்சில் நடந்து வருகிறது.
திடீரென்று இயக்குனருக்கு ஒரு லிப் லாக் முத்தக் காட்சி வைத்தால் என்ன? என்று தோன்றியிருக்கிறது. ஆனால் மீனாட்சியிடம் கதை சொல்லும்போது முத்தக்காட்சி இருப்பதாக சொல்லவில்லை. திடீரென சொன்னால் ஏற்றுக் கொள்வாரா மாட்டாரா என்ற தயக்கம் இயக்குனருக்கு இருந்திருக்கிறது. அதனால் அவரை சம்மதிக்க வைக்க துணை இயக்குனர்களை கொண்ட ஒரு குழுமை நியமித்திருக்கிறார். அவர்களும் கதை பற்றியும், முத்தக்காட்சியின் அவசியம் பற்றி மீனாட்சியிடம் வற்புறுத்தி நடிக்க சம்மதம் வாங்கியிருக்கிறார்கள். கடைசி நேரத்தில் என்ன நடந்ததோ தெரியவில்லை. படத்தின் ஹீரோவும், தயாரிப்பாளருமான ரஃபி முத்தக்காட்சி வேண்டாம் என்று சொல்ல முத்த பிரச்னை சத்தமில்லாமல் முடிந்திருக்கிறது.