தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
காமெடியனாக நடிப்பதை நிறுத்திக்கொண்ட சந்தானம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களைத் தொடர்ந்து லொள்ளு சபா ராம் பாலா இயக்கும் படத்தில் தற்போது நாயகனாக நடித்து வருகிறார். அதனால் அவர் காமெடியனாக நடிக்க வேண்டிய படங்களில் சூரி நடித்து வருகிறார். ஆனால் அவருக்கு இணையாக இப்போது மொட்டை ராஜேந்திரனும் பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். அந்த வகையில் அவரது ஒருநாள் சம்பளம் ஒன்றரை லட்சமாகியிருக்கிறது. ஒருநாள்கூட ஓய்வில்லாமல் இரவு பகலாக கால்சீட் கொடுத்து ரொம்ப பிசியாக நடித்து வருகிறார் ராஜேந்திரன்.
இந்த நிலையில், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 59வது படத்திற்கு மட்டும் மொத்த கால்சீட்டாக 70 நாட்கள் கொடுத்துள்ளாராம் மொட்டை ராஜேந்திரன். அந்த அளவுக்கு படம் முழுக்க விஜய்யுடன் காமெடி காட்சிகளில் நடித்து வருகிறாராம் அவர். இப்படி விஜய் படத்தில் முக்கிய காமெடியனாகி விட்டதால்தான், புதிய படங்களில் நடிக்க சில நிறுவனங்கள் அவரை தொடர்பு கொண்டால், ஒரு ரெண்டு மாசத்துக்கு என்னால் அந்த படத்தில் இருந்து வெளியே வர முடியாது என்று யாருக்கும் பிடிகொடுக்காமல் நழுவிக்கொண்டு வருகிறார். மேலும், இந்த படம் வந்தால் மொட்டை ராஜேந்திரனின் காமெடி மார்க்கெட் இன்னும் பன்மடங்கு அதிகரித்து விடுமாம். அந்த அளவுக்கு அவருக்கு அதிரடியான காமெடி காட்சிகளை கொடுத்துள்ளாராம் அட்லி.