விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
இத்தனை நாளும் விஜய் படம் வெளியாகும் சமயங்களில், பனியன் வெளியிடும் அவரது ரசிகர் மன்றத்தினர், அந்தந்த படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் இருக்கும் அதே தோற்றத்தையும் அந்த பனியன்களில் அச்சிட்டு அதை பெருமையாக அணிந்து கொண்டு வந்தனர். அவரது ரசிகர் மன்றம் சார்பில் தமிழகம் முழுவதும் அந்த பனியன்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. அந்த பனியன்களில் விஜய் படங்களில் பேசும் பஞ்ச் டயலாக்குகளும் சிறிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தன.
அந்த வகையில், தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 59-வது படத்தில் அவரது கெட்டப் பொறிக்கப்பட்ட பனியன்களும் தற்போது தயாராகி வருகிறதாம். இவை தமிழகத்திலுள்ள விஜய் ரசிகர் மன்றங்கள் அனைத்திற்கும் சப்ளை செய்யப்பட்டு, வருகிற தீபாவளி தினத்தில் விஜய் ரசிகர்கள் அனை வரும் அந்த பனியன்களை அணிந்து சந்தோசத்தை கொண்டாடப்போகிறார்களாம்.
இந்தநிலையில், தற்போது விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விஜய் இருவரது படம் பொறித்த பட்டு சேலைகளும் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. பனியன்கள் ரசிகர்களுக்கு என்றால், பட்டு புடவைகள் விஜய்யின் ரசிகைகளுக்காம். தீபாவளிக்கு முன்பே இந்த பட்டு புடவையும் விற்பனைக்கு வந்துவிட்டது. இதையும் விஜய் ரசிகர் மன்றத்தினரே சப்ளை செய்து வருகின்றனர்.