மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் |
இருக்கு ஆனா இல்ல படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தவர் மனீஷாஸ்ரீ அதற்கு பிறகு அவரை ஆளையே காணவில்லை. இப்போது அவர் பாலிவுட் நடிகை ஆகிவிட்டார். ட்ரீஸ் என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் படம். அவருக்கு ஜோடியாக கதை திரைக்கதை வசனம் படத்தில் நடித்த சந்தோஷ் நடிக்கிறார். லோகேஷ் என்ற புதுமுக நடிகரும் நடிக்கிறார். சோழன் இயக்குகிறார். இதே படம் தமிழில் மீண்டும் வா அருகில் வா என்ற பெயரில் தயாராகிறது. அதில் மனீஷாஸ்ரீ நடிக்கவில்லை வேறொருவர் நடிக்கிறார்.
தமிழில் விக்ரம்பிரபு நடிக்கும் வீரசிவாஜி படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறார். "தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காதபோது திடீரென இந்தி வாய்ப்பு கிடைத்தது. ட்ரீஸ் தவிர மேலும் இரண்டு இந்திப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். இந்திப் படத்தில் நடித்தாலும் தமிழ் படங்களுக்குதான் முக்கியத்தும் தருவேன். அடுத்தடுத்து இரண்டு தமிழ் படங்களில் நடிக்க இருக்கிறேன்" என்கிறார் மனீஷாஸ்ரீ.