இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அண்மையில் வெளிவந்த அதிஅற்புதமான படங்களில் ஒன்று குற்றம் கடிதல். இந்தப் படத்தைத் தயாரித்தவர் கிறிஸ்டி என்பவர். மிகுந்த சிரமங்களுக்கு இடையில் குற்றம் கடிதல் படத்தை தயாரித்த இவரால் படத்தை வெளியிட முடியவில்லை. இந்த நேரத்தில் பிரபல விநியோகஸ்தரான ஜே.எஸ்.கே. பிலிம்ஸ் சதீஷ்குமார் என்பவர் குற்றம் கடிதல் படத்தைப் பார்த்துவிட்டு தானும் ஒரு தயாரிப்பாளராக இணைந்தார். அதன் பிறகு குற்றம் கடிதல் படத்தை பல்வேறு பட விழாக்களுக்கு அனுப்பி வைத்தனர். படவிழாக்களில் விருதுகளைக் குவித்த குற்றம் கடிதல் படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் தியேட்டருக்கு வந்த குற்றம் கடிதல் படம் மக்கள் மத்தியில் ஓரளவுக்கு வரவேற்பு பெற்றாலும், காக்கா முட்டை படத்தைப்போல் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனாலும் குற்றம்கடிதல் படத்தின் தயாரிப்பு செலவைவிட வசூல் அதிகம்தான். அந்த வகையில் குற்றம் கடிதல் படம் வெற்றிப்படம் என்று எண்ணியோ என்னவோ அப்படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளர் கிறிஸ்டி சக்சஸ்மீட் நடத்தினார்.
திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்ட அந்த சக்சஸ் மீட்டுக்கு, கடைசி சேரத்தில் குற்றம் கடிதல் படத்தின் தயாரிப்பாளராக இணைந்த விநியோகஸ்தர் சதீஷ்குமாரை அழைக்கவில்லை.