போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
தமிழ்த் திரையுலகில் உள்ள இப்போதைய நடிகர்களில் நடிப்புக்காக அனைத்து ரசிகர்களாலும் பாராட்டப்படும் ஒரு நடிகராக விஜய் சேதுபதி வளர்ந்து வருகிறார். விஜய் சேதுபதி சீக்கிரமே, கமல்ஹாசன், விக்ரம் வரிசையில் சேர்ந்து விடுவார் போல் தெரிகிறது. வித்தியாசமான கதாபாத்திரங்கள், வித்தியாசமான படங்கள் என படத்துக்குப் படம் தன்னை மாற்றிக் கொண்டே வருகிறார். தொடர்ந்து ஆறு தோல்விப் படங்களில் நடித்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மசாலாப் படங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்.
சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நானும் ரௌடிதான் படத்திலும் அவருடைய கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்காக தன்னுடைய உடல் எடையைக் குறைப்பதற்காக பத்து நாட்கள் வரை பச்சைத் தண்ணீர் மட்டுமே குடித்திருக்கிறார். வேறு எந்த உணவையும் அவர் சாப்பிடாமலே இருந்திருக்கிறார். அதில் பத்து கிலோ வரை தன்னுடைய உடல் எடையைக் குறைத்திருக்கிறார். அதற்கு மேல் பட்டினியாக இருக்க முடியவில்லை, இருந்திருந்தால் இன்னும் எடையைக் குறைத்திருப்பேன் என சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார்.
10 நாள் பட்டினியாக இருந்ததன் பலன் 10 நாட்கள் எண்றதுக்குள்ள இல்லாமல் 10 காட்சிகளுக்குள்ளாகவே அவருக்குக் கிடைத்துவிட்டது.