இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாக்கியராஜ் கண்ணன் என்ற அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகிறது. அனிருத் இசையமைப்பில் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் படம் இது. சிவகார்த்திகேயனின் மேனேஜராக இருக்கம் ஆர்.டி.ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படத்தைத் தொடர்ச்சியாக ஒரே ஷெட்யூலில் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்திலும் நடிக்கிறார். இதற்காக கடந்த சில மாதங்களாக அவர் தொடர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். 'ஐ' படத்திற்கு சிறப்பு மேக்கப் செய்த வீடா நிறுவனத்தைச் சேர்ந்த சீன் ஃபூட் இந்தப் படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு சிறப்பு மேக்கப்புகளைச் செய்ய உள்ளார்.
சிவகார்த்திகேயனின் பெண் வேட தோற்றத்தை அச்சு அசல் பெண் போல உருவாக்கி கடந்த சில மாதங்களாக டெஸ்ட் செய்து பார்த்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன், ஸ்ருதிஹாசன் ஆகியோரில் யாராவது ஒருவர் நடிப்பார் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால், கடைசியில் 'ரஜினி முருகன்' படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ் இப்படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து ஃபோட்டோ செஷனையும் எடுத்து முடித்துவிட்டார்கள்.
முற்றிலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் படமாக இந்தப் படம் உருவாக உள்ளது. விரைவில் படத்தைன் தலைப்பும், முதல் பார்வையும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.