ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சரோஜா, தமிழ்ப்படம், கலகலப்பு, தில்லுமுல்லு, யா யா, வணக்கம் சென்னை போன்ற படங்களில் நடித்தவர் மிர்ச்சி சிவா. கடைசியாக பாபி சிம்ஹாவுடன் இணைந்து இவர் நடித்த மசாலா படத்தை பெரிதாக எதிர்பார்த்தார். ஆனால் அந்த படம் வந்தவேகத்திலேயே ஓட்டம் பிடித்து விட்டது. அடுத்தபடியாக 144 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், கச்சேரி ஆரம்பம் படத்தை இயக்கிய திரைவண்ணன் இயக்கும் சிம்மக்கல் சேகர் என்ற படத்தில் அடுத்து நடிக்கப்போகிறாராம் மிர்ச்சி சிவா. சந்தானம், சேது, பவர்ஸ்டார் கூட்டணி அமைத்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தைப்போன்று முழுநீள காமெடி கதையில் இப்படம் தயாராக உள்ளதாம்.
இந்த படத்தில் தன்னுடன் ஒரு நல்ல காமெடியன் இருந்தால்தான் ஒர்க்அவுட்டாகும் என்று பலரை பரிசீலனை செய்த சிவா, இப்போது டாக்டர் சீனிவாசனை ஓகே பண்ணியிருக்கிறார். இதற்கு முன்பு சிவா நடித்த யா யா என்ற படத்தில் சில காட்சிகளில் நடித்தார் சீனிவாசன். ஆனால் அந்த படத்தில் சந்தானம் மெயின் காமெடியனாக இருந்ததால் இவரது நடிப்பு பெரிதாக எடுபடவில்லை.
ஆனால் இந்த படத்தில் படம் முழுக்க மிர்ச்சி சிவாவுடன் டாக்டர் சீனிவாசனும் வருகிறாராம். இருவரும் சேர்ந்து ஒரே பெண்ணை துரத்துவது, காதல் தூது விடுவது என்று இந்த படத்தில் செம ரகளை செய்யப்போகிறார்களாம். ஆக, சந்தானத்துக்குப்பிறகு யாருமே கைகொடுக்காமல் தடுமாறிக்கொண்டு வந்த டாக்டர் சீனிவாசன், மிர்ச்சி சிவாவின் கைகளை பற்றிக்கொண்டு மெல்ல விட்ட மார்க்கெட்டை பிடித்து விட வேண்டும் என்று வரிந்து கட்டியுள்ளார்.