தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வெற்றிப்படமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் வித்தியாசமான படம் என்ற பெயரைப்பெற்றது குக்கூ படம். 'அட்டகத்தி' தினேஷ், மாளவிகா நாயர் நடித்த 'குக்கூ' படத்தை இயக்கியவர் ராஜுமுருகன். பத்திரிகையாளராக இருந்து இயக்குனரானவர் இவர். குக்கூ படத்தை அடுத்து ராஜுமுருகன் இயக்கும் படத்தை தயாரித்து வரும் எஸ்.ஆர்.பிரபுவின் 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது.
கார்த்தி நடிப்பில் 'காஷ்மோரா' என்ற படத்தை தற்போது தயாரித்து வரும் இந்த நிறுவனம் அடுத்த தயாரிப்பாக ராஜுமுருகனின் படத்தைத் தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது தருமபுரியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
'கல்லூரி', 'பரதேசி', 'தாரை தப்பட்டை' உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த செழியன் இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை ஏற்றுள்ளார். வாயை மூடி பேசவும், 'முண்டாசுபட்டி' போன்ற படங்களுக்கு இசை அமைத்த சீன் ரால்டன் இப்படத்துக்கு இசை அமைக்கிறார். குக்கூ படத்துக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தற்போது கபாலி படத்துக்கு இசையமைப்பதால் இந்தப் படத்துக்கு இசையமைக்க மறுத்துவிட்டார் என்பது கூடுதல் தகவல்.