மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
எத்தனை தோல்விகள் வந்தாலும் ஒரே ஒரு வெற்றி வாழ்க்கையையே திருப்பிப் போட்டுவிடும். அப்படி ஒரு மாற்றம் விஜய் சேதுபதிக்கு 'நானும் ரௌடிதான்' வெற்றி மூலம் கிடைத்திருக்கிறது. வளர்ந்து வரும் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களுடன் முன்னணி ஹீரோயின்கள் பொதுவாக நடிக்க சம்மதிக்க மாட்டார்கள். அப்படியிருந்தும் 'மான் கராத்தே' படத்தில் ஹன்சிகா சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அந்தப் படமும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. அதே போல ஹன்சிகா தற்போது வளர்ந்து வரும் மற்றொரு நடிகரான விஜய் சேதுபதியுடனும் சேர்ந்து நடிக்க சம்மதித்துள்ளாராம்.
'நானும் ரௌடிதான்' படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதியை மீண்டும் தனது நிறுவனத்திற்காக ஒப்பந்தம் செய்து விட்டார் தனுஷ். அடுத்து விஜய் சேதுபதியை வைத்து அவர் தயாரிக்க உள்ள படத்தில்தான் ஹன்சிகா ஜோடி என்கிறார்கள். சில நாட்களுக்கு முன் 'பிரேமம்' படத்தின் ரீமேக்கில்தான் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. ஆனால், தனுஷ் தயாரிக்க விஜய் சேதுபதி நடிக்க உள்ள அந்தப் புதிய படத்தை தனுஷின் மனைவியாக ஐஸ்வர்யா இயக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 'பிரேமம்' ரீமேக்கா அல்லது மனைவி இயக்கும் படமா என்பதை தனுஷ்தான் முடிவு செய்வார் என்கிறார்கள்.
எப்படியோ விஜய் சேதுபதி காட்டில் முன்னணி ஹீரோயின்களின் மழை...!