ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காலம் மாற மாற, மாற்றத்தை விரும்பும் இளைஞர்களுக்காக சூப்பர் ஹீரோக்கள் தங்களை அப்டேட் பண்ணிக்கொள்வதற்காக இளம் இயக்குனர்களுடன் கூட்டணி சேர்ந்து கொள்வதுதான் வழக்கம்.. ஒரு காலத்தில் அந்த ஹீரோக்களை வைத்து பல ஹிட்டுகள் கொடுத்திருந்தாக்ளும் கூட காலமாற்றத்திற்கு ஏற்ப தங்களை அப்டேட் பண்ணிக்கொள்ளாததால் சீனியர் இயக்குனர்கள் அந்த ஹீரோக்களுடன் தொடர்ந்து ட்ராவல் பண்ணும் வாய்ப்பை இழக்கிறார்கள். இது அனைத்து மொழி சினிமாவுக்கும் பொருந்தும்.. அப்படித்தான் மம்முட்டியை வைத்து சில படங்களை இயக்கிய, தற்போதும் லைம்லைட்டில் இருக்கிற மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு 18 வருடங்கள் கழித்து மீண்டும் மம்முட்டியுடன் இணையப்போவதாக சொல்லப்படுவதையும் பார்க்கவேண்டும்.
சமீபத்தில் மம்முட்டியின் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பேரர் ஓடிக்கொண்டிருக்கும் 'பத்தேமாறி' படத்தில் மம்முட்டியின் நடிப்பை புகழ்ந்து தள்ளினார் சத்யன் அந்திக்காடு.. இதன் பின்னணியில் அடுத்து அவர் மம்முட்டியை வைத்து படம் இயக்கப்போகும் காரணமும் இருக்கிறது என்கிறார்கள். மம்முட்டி - சத்யன் அந்திகாடு இருவர் கூட்டணியில் உருவாகும் படம் என்றாலே அதற்கென ஒரு ராசி அப்போது உருவாகிவிட்டது. அதாவது படம் நன்றாக இருக்கும்.. ஆனால் வசூல் ரீதியாக பார்த்தால் பெரிய ஹிட்டாக இருக்காது.. இப்படியே எத்தனை படங்கள் இணைந்து பணியாற்ற முடியும்..? அதனால் தான் இந்த 18 வருட இடைவெளி. ஆனால் மோகன்லால், ஜெயராம் இருவரையும் வைத்து சத்யன் அந்திக்காடு இயக்கிய பல படங்கள் சூப்பர்ஹிட்.. அதனால் தான் மூன்று வருடங்களுக்கு ஒருமுறையாவது இவர் டைரக்சனில் நடித்து விடுகிறார் மோகன்லால்