'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அத்திப்பூக்கள் தொடரில் நடித்த சந்தியாவை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. காயத்ரியாக வாழ்ந்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ரம்யா கிருஷ்ணனின் வம்சம் தொடரில் மலைவாழ் பெண்ணாக நடித்து வருகிறார். இதில் கும்கி படத்தில் லட்சுமி மேனன் வரும் கெட்-அப்பில் நடித்து எல்லோரையும் கவர்ந்து வருகிறார்.
அப்படியே சினிமாவிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். விஜய் ஆண்டனி நடித்து வரும் சைத்தான் படத்தில் வில்லியாக நடிக்கிறார். விஜய் ஆண்டனி வேலை செய்யும் அலுவலக பாஸாக நடித்து வருகிறார். விஜய் ஆண்டனியை மனரீதியாக டார்ச்சர் செய்யும் கேரக்டர். அடுத்து பேய்கள் ஜாக்கிரதை என்ற படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
"சின்னத்திரை தந்த அடையாளம்தான் சினிமா வாய்ப்புகள் வருகிறது. சின்னத்திரையில் வித்தியாசமான கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பதைப்போலத்தான் பெரிய திரையிலும் கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கிறேன். பேய்கள் ஜாக்கிரதை படத்தில் சொந்த குரலில் பேசி நடித்திருக்கிறேன். இனி வரும் படங்களிலும் சொந்தக் குரலில்தான் பேசுவேன்" என்கிறார் சந்தியா.