ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல தயாரிப்பாளர் சி.பி.குமார். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும், முண்டாசு பட்டி, தெகிடி, இன்று நேற்று நாளை என பல வெற்றிப் படங்களை தயாரித்தவர். தற்போது சி.வி.குமார் இயக்குனராகியிருக்கிறார். அவர் இயக்கும் படத்திற்கு மாயவன் என்று பெயர் வைத்திருக்கிறார். இது ஒரு த்ரில்லர் படம். இதில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக நடிக்கத்தான் தீவிரமாக ஹீரோயின் தேடி வந்தார் சி.வி.குமார், கீர்த்தி சுரேஷ், லாவண்யா திரிபாதி ஆகியோரிடம் கேட்டதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். உங்க தயாரிப்பில் நடிக்கிறோம், இயக்கத்தில் வேண்டாம் என்று நாசுக்காக நழுவி விட்டனர். தற்போது அனேகன் படத்தில் நடித்த அமைரா தஸ்தூர் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதன் படப்பிடிப்புகள் தீபாவளிக்கு பிறகு தொடங்குகிறது. படப்பிடிப்புக்கு முன்னதாக 10 நாட்கள் ஒத்திகை நடக்கிறது. இதில் கலந்து கொள்ள அடுத்த மாதம் அமைரா தஸ்தூர் வருகிறார். ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க முடிவு செய்திருக்கிறார் சி.வி.குமார்.