பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சமூகவலை தளங்களில் இணையும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன் நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை நமிதா ஆகியோர் ட்விட்டரில் இணைந்தனர். அவர்களைத்தொடர்ந்து இன்னொரு ஹீரோவும் ட்விட்டரில் இணைய உள்ளார். அவர் ராகவா லாரன்ஸ். நடிகரும், நடன இயக்குநரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸுக்கு நாளை (29-10-15) பிறந்த நாள்!
தனது ஒவ்வொரு பிறந்த நாளன்றும் ஏழைகளுக்கு நிறைய உதவிகள் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் லாரன்ஸ். தான் படிக்க வைக்கும் 400 ஏழைக் குழந்தைகளுடன் அம்பத்தூரில் உள்ள ஸ்ரீராகவேந்திரா கோவிலில் இந்த வருட பிறந்த நாளை கொண்டாட முடிவு செய்திருக்கிறார் லாரன்ஸ்!
அதுமட்டுமல்ல, இதுவரை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற எந்த சமூக வலைதளங்களிலும் ஆர்வம் காட்டாமல் இருந்த ராகவா லாரன்ஸ் தனது பிறந்த நாளையொட்டி ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூகவலை தளங்களில் இணையவும் செய்கிறார். நாளை தன்னுடைய ஃபேஸ்புக், ட்விட்டர் ஐடியை அறிவிக்க இருக்கிறாராம்.