Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

“10 வருடம் காத்திருந்தாலும் மோகன்லாலுடன் நடித்துவிட்டேன்” - ஹனிரோஸின் பெருமிதம்..!

28 அக், 2015 - 14:37 IST
எழுத்தின் அளவு:
Honey-rose-happy-acting-with-Mohanlal

கடந்த 2005ல் மலையாளத்தில் வினயன் இயக்கிய 'பாய் பிரண்ட்' படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் ஹனிரோஸ்.. மலையாளத்தில் சின்னச்சின்ன ரோலில் நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென தமிழுக்கு வந்து 'சிங்கம்புலி' படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக கூட நடித்தார். ஒருகட்டத்தில் 'த்ரிவேண்ட்ரம் லாட்ஜ்', 'ஹோட்டல் கலிஃபோர்னியா', 'அஞ்சு சுந்தரிகள்' என வரிசையாக இவர் நடித்த படங்கள் எல்லாம் ஹிட் அடிக்க, மலையாளத்தில் முக்கியமான நடிகையாகிவிட்டார் ஹனிரோஸ். குறிப்பாக 'த்ரிவேண்ட்ரம் லாட்ஜ்' படத்திற்குப்பின் மிகவும் போல்தான கேரக்டர்களே இவரை தேடிவர ஆரம்பித்தன.


அதனால் தொடர்ந்து வரிசையாக இளைய தலைமுறை இயக்குனர்களின் படங்களாலும், ஜெயராம், சுரேஷ்கோபி என சீனியர் நடிகர்களின் படங்களாலும் நிரம்பியது ஹனிரோஸின் கால்சீட் டைரி. ஆனாலும் எல்லா நடிகைகளையும் போல இவருக்கும் சூப்பர்ஸ்டார் மோகன்லாலுடன் நடிக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கவே செய்தது.. நயன்தாரா போன்ற சிலருக்கு நடிக்கவந்த இரண்டாவது படத்திலேயே மலையாளத்திலும், தமிழிலும் சூப்பர்ஸ்டார்களுடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது போல எல்லோருக்குமா அப்படி கிடைத்து விடுகிறது..


அதனால் எங்கே மோகன்லாலுடன் நடிக்க முடியாமலேயே தனது திரையுலக பயணம் முற்றுப்பெற்று விடுமோ என பயந்த ஹனிரோஸுக்கு பத்து வருடம் கழித்து 'கனல்' படம் மூலம் வாய்ப்பு கிடைத்து அவரது மனக்குறை தீர்ந்துள்ளது. கடந்த வாரம் வெளியான 'கனல்' படத்தில் மோகன்லாலுக்கு மனைவியாக, ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்துள்ள ஹனிரோஸுக்கு பாராட்டுகள் குவிகின்றன.. “எப்படியோ பத்து வருடம் காத்திருந்தாலும் மோகன்லாலுடன் நடித்துவிட்டேன்” என பெருமிதப்படுகிறார் ஹனிரோஸ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in