'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
ரஜினிகாந்த் நடித்த படங்களில் மாபெரும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்று 'மாப்பிள்ளை'. 1989ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி தீபாவளியன்று வெளியான படங்களில் மிகப் பெரிய வெற்றியைப் படமாக 'மாப்பிள்ளை' அமைந்தது. அதே தினத்தில் கமல்ஹாசன் நடித்த 'வெற்றி விழா', விஜயகாந்த் நடித்த 'தர்மம் வெல்லும், ராஜநடை ', ராமராஜன் நடித்த 'அன்புக் கட்டளை, தங்கமான ராசா', சத்யராஜ் நடித்த 'வாத்தியார் வீட்டுப் பிள்ளை', பாலசந்தர் இயக்கிய 'புதுப்புது அர்த்தங்கள்' ஆகிய படங்கள் வெளிவந்தன. அன்று வெளியான எல்லாப் படங்களிலும் 'மாப்பிள்ளை' மற்ற படங்களைக் காட்டிலும் அதிக வசூலைக் குவித்து பெரிய வெற்றியைப் பெற்றது.
தெலுங்கில் சிரஞ்சீவி, விஜயசாந்தி, வாணிஸ்ரீ நடித்து 'அத்தக்கு யமுடு அம்மாயிக்கி மொகுடு' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் வெளியானது. தெலுங்கில் நாயகனாக நடித்த சிரஞ்சீவி தமிழில் இப்படத்தைத் தயாரித்தார். அதோடு ஒரு முக்கிய சண்டைக் காட்சியிலும் நடித்திருப்பார்.
ராஜசேகர் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக அமலா நடிக்க, ரஜினியின் மாமியாராக ஸ்ரீவித்யா நடிக்க இளையராஜா இசையில் இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்களும் இனிமையாக அமைந்து படத்தை பெரிய வெற்றிப் படமாக்கியது. 200 நாட்கள் ஓடி வெற்றி பெற்ற இந்தப் படத்தைத்தான் தனுஷ், ஹன்சிகா, மனிஷா கொய்ராலா நடிக்க மீண்டும் ரீமேக் செய்து 2011ம் ஆண்டு வெளியிட்டார்கள்.
ரஜினிகாந்த் நடித்த படங்களில் 'மாப்பிள்ளை' படமும் ஒரு மறக்க முடியாத படமே. அப்படிப்பட்ட படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகின்றன.