பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஒரு தோல்வி, இரண்டு தோல்வி என்றால் சமாளித்து விடலாம், ஆனால் தொடர்ச்சியாக ஆறு தோல்வி என்றால் யாரால்தான் சமாளிக்க முடியும். அப்படி ஒரு மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார் ஆர்யா. இப்போதைக்கு ஆர்யா கைவசம் இரண்டே இரண்டு படங்கள்தான் உள்ளன. இந்த இரண்டு படங்களும் எப்போதோ ஒப்பந்தமானவைதான். ஆர்யாவைத் தேடி புதிய பட வாய்ப்புகள் எதுவுமே வரவில்லையாம். தொடர்ச்சியாக ஆறு தோல்விகளைக் கொடுத்தவரை யார் போய் புக் செய்வார்கள்.
இருந்தாலும் மனம் தளராமல் தெரிந்த கம்பெனிகளிடமும், இயக்குனர்களிடமும் ஆர்யா வாய்ப்பு கேட்கத் தயங்கவில்லை என்கிறார்கள். கே.வி.ஆனந்த் இயக்க உள்ள படத்தில் நடிக்கலாம் என நினைத்திருந்தவருக்கு அதுவும் கிடைக்காமல் போய்விட்டது. இப்போது அந்த வாய்ப்பு விஷாலைத் தேடிச் சென்றுவிட்டதாகத் தகவல்.
பட வாய்ப்புதான் இல்லையென்றிருந்தவருக்கு, நட்புக்காக ராஜேஷை இயக்குனராக வைத்து தயாரித்த 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படம் மூலமாக பணக் கஷ்டமும் வந்துவிட்டதாம். இருந்தாலும் எப்படியும் அடுத்து வெளிவர உள்ள படங்களில் இழந்த மார்க்கெட்டைப் பெற்று விடுவதில் உறுதியாக உள்ளாராம். ஆறு தோல்விக்குப் பிறகுதானே விஜய் சேதுபதிக்கும் ஒரு பெரிய வெற்றி கிடைத்துள்ளது, ஆர்யாவுக்குக் கிடைக்காமல் போய்விடுமா என்ன...?