பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சூதுகவ்வும் படத்துக்குப் பிறகு ஏறக்குறைய அரைடஜன் ப்ளாப் படங்களைக் கொடுத்த விஜய்சேதுபதி கின்னஸில் இடம்பெறும் நிலையில் இருந்தார். அதிலும் தன்னுடைய நண்பர்கள் பெயரில் அவரே தயாரித்து நடித்த ஆரஞ்சுமிட்டாய் படம் விஜய்சேதுபதியை வீழ்ச்சிப்பள்ளத்தில் உருட்டிவிட்டது. அதனாலேயே நானும் ரௌடிதான் படம் கடைசிவரை பிசனஸ் ஆகவே இல்லை. தனுஷ் தயாரிக்கும் படங்களை கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் கூட நானும் ரௌடிதான் படத்தை வாங்க முன்வரவில்லை. தானே வலிய சென்று வாங்கிக்கொள்ளும்படி கேட்டும் அடிமாட்டவிலைக்கு படத்தைக் கேட்டிருக்கிறார் மதன்.
தனுஷின் ஆஸ்தான் பைனான்சியரான மதுரை அன்புவும் விஜய்சேதுபதி படம் என்பதால் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். கடைசியில் வேறு வழியே இல்லாமல், லைகா நிறுவனத்திடம் டிஸ்ட்ரிபியூஷன் அடிப்படையில் படத்தை வெளியிடும்படி சொல்லி இருக்கிறார் தனுஷ். தனுஷ் தயாரிப்பில், விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த படம், அனிருத்தின் சூப்பர்ஹிட் பாடல்கள் போன்ற அம்சங்கள் 'நானும் ரௌடிதான்' படத்துக்கு சின்னதாக ஓப்பனிங்கைக் கொடுக்க, படமும் சுவாரஸ்யமாக இருந்ததால் ரசிகர்கள் வெற்றியடைய வைத்துவிட்டனர்.
முதல் 4 நாட்களிலேயே தமிழகத்தில் மட்டும் 8 கோடிகளை வசூலித்துள்ள 'நானும் ரௌடிதான்' படத்துக்கு பாசிட்டிவ்வான 'டாக்' இருப்பதால் நேற்றும் (அக்டோபர் 26) சுமார் 70 சதவிகித அளவில் தியேட்டர் நிறைந்ததாக சொல்கிறார்கள் விநியோகஸ்தர்கள். மொத்தத்தில் விஜய்சேதுபதியை காப்பாற்றிவிட்டார் விக்னேஷ்சிவன்.