இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
டைரக்டர் சாமி இயக்கிய கங்காரு படத்தில் நாயகியாக நடித்த வர்ஷா, தங்கையாக நடித்த ஸ்ரீபிரியங்கா ஆகிய இருவரும் தல-தளபதி ரசிகைகளாக நடித்தனர். அதேபோல் வாலு படத்தில் நடித்த சிம்பு, யட்சன் படத்தில் நடித்த ஆர்யா ஆகியோர் தல ரசிகர்களாக நடித்தனர். இப்படி பலர் அஜீத்தின் ரசிகர்களாக நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அஜீத்தின் மனைவி ஷாலினியின் தங்கையான ஷாம்லி தான் நாயகியாக நடிக்கும் வீரசிவாஜி படத்தில் விஜய் ரசிகையாக நடிக்கிறாராம். அருள்நிதி நடித்த தகராறு படத்தை இயக்கிய கணேஷ் விநாயக் இயக்கும் இந்த படத்தில் விஜய் படங்களைப்பார்த்து விட்டு அவரது நடிப்பைப்பற்றி தோழிகளிடம் பெருமையாக சொல்வாராம் ஷாம்லி.
ஆக, விஜய்-அஜீத் ரசிகர்கள் இணையதளங்களில் எதிரும் புதிருமாக மோதிக்கொண்டு வரும் இந்த தருணத்தில், அஜீத்தின் மச்சினிச்சியே விஜய்யின் ரசிகையாக நடிப்பது மேற்படி நடிகர்களின் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.