ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
த்ரிஷ்யம் மலையாள படத்தில் ஐஜி வேடத்தில் நடித்தவர் ஆஷாசரத். மலையாள சீரியல் நடிகையான இவர் அதன்பிறகு அதே படத்தில் தமிழ், கன்னட ரீமேக்கிலும் நடித்து பேசப்பட்டார். அதன்காரணமாக, தற்போது கமலுடன் தூங்காவனம் படத்திலும் நடித்துள்ளார். இதன்பிறகும் தமிழில் தனக்கேற்ற கேரக்டர்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார் ஆஷா.
மேலும், த்ரிஷ்யம் படத்திற்கு பிறகு மலையாளத்தில் பல படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களுக்கு கமிட்டான ஆஷாசரத், தற்போது மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால் போன்ற மெகா நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கிறாராம். அதோடு அவரது சம்பளமும் அங்குள்ள முன்னணி நடிகைகளுக்கு இணையாக கிடுகிடுவென உயர்ந்து நிற்கிறதாம்.
அதோடு, த்ரிஷ்யம் படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்த மீனா, தனக்கு மலையாளத்தில் இனிமேல் நிறைய படங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு பெரிய அதிர்ச்சியே கிடைத்திருக்கிறது. காரணம், த்ரிஷ்யம் படத்தில் மீனா நடித்து வந்தபோது அடுத்தபடியாக மோகன்லாலை வைத்து படம் இயக்கயிருந்தவர்கள் மீனாவையே அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்கும் முடிவில் இருந்தார்களாம். ஆனால், த்ரிஷ்யம் வெளியான பிறகு ஆஷாசரத்தின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டதால், மீனாவிடம் கதை சொல்லியிருந்தவர்கள்கூட ஆஷா பக்கம் சாய்ந்து விட்டார்களாம்.