ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நானும் ரவுடிதான் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதியின் காட்டில் ஹீரோயின் மழை பெய்ய தொடங்கிவிட்டது. விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். கதை கேட்டு ஒத்துக் கொண்ட ஹன்சிகா தேதிகளை ஒதுக்கி தருவதாக கூறியிருக்கிறாராம். ஒருவேளை ஹன்சிகா தேதிகள் சரியாக அமையாவிட்டால் லட்சுமி மேனன் நடிக்கலாம் என்கிறார்கள்.
ரேணிகுண்டா இயக்குனர் பன்னீர் செல்வத்தின் உதவியாளர் ரத்தின சிவா இயக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இவர் இயக்கிய வா டீல் படம் வெளிவராமல் இருக்கிறது. காமன் மேன் பிக்சர்ஸ் சார்பில் பி.கணேஷ் தயாரிக்கிறார். சலீம் படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் சந்த்ரா ஒளிப்பதிவு செய்கிறார். இசை அமைப்பாளரும் மற்ற கலைஞர்களும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மதுரை, கோவை, கும்பகோணம் பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது.