பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் அறிமுகமானவர் ஆண்ட்ரியா. அதையடுத்து ஆயிரத்தில் ஒருவன் உள்பட சில படங்களில் நடித்தவர், கமலுடன் விஸ்வரூபம், விஸ்வரூபம்-2, உத்தமவில்லன் ஆகிய படங்களிலும் நடித்தார். அந்த வகையில், தொடர்ந்து 3 படங்களில் கமலுடன் நடிக்கும் அரிய வாய்ப்பினை பெற்றார் ஆண்ட்ரியா. இருப்பினும் தற்போது அவர் கைவசம் தங்கமீன்கள் ராமின் தரமணி படம் மட்டுமே உள்ளது. இந்த படத்தில் லீடு ரோலில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. இந்த படம் தனக்கு பெரிய பெயரை வாங்கித்தரும் என்று எதிர்பார்க்கும் அவர் இப்போதைக்கு முன்னணி ஹீரோக்களின் படங்கள் வந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வது என்ற முடிவில் இருக்கிறார்.
மேலும், சமீபத்தில் ஜீ தமிழ் சேனலில் குஷ்பு நடத்தி வரும் சிம்ப்ளி குஷ்பு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆண்ட்ரியாவிடம், எந்த நடிகருடன் கதை, சம்பளம் பற்றி கேட்காமல் நடிக்க சம்மதிப்பீர்கள்? என்று குஷ்பு கேட்டபோது, சிறிதும் தாமதிக்காமல், அஜீத் என்று சொன்னார். அதையடுத்து, சமீபகாலமாக இசையமைப்பாளர்களும் நடிகர்களாகி வருவதை சுட்டிக்காட்டி, எந்த இசையமைப்பாளருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்? என்று குஷ்பு கேட்டதற்கு, இப்போது ஹீரோவாகியுள்ள இசையமைப்பாளர்களின் பெயரை குறிப்பிடாமல் ஏ.ஆர்.ரகுமானுடன் நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை பளிச்சென்று தெரிவித்தார் ஆண்ட்ரியா.