Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சித்ரா மகள் உடலுக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி

14 ஏப், 2011 - 15:35 IST
எழுத்தின் அளவு:

பிரபல பின்னணி பாடகி சித்ராவின் 8வயது மகள் நந்தனா, நீச்சல் குளத்தில் விழுந்து பலியானார். பிரபல பின்னணி பாடகி சின்னகுயில் சித்ரா. மலையாளத்தை சேர்ந்தவரான இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஒரியா, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருக்கும் ‌விஜயசங்கர் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு 8வயதாகிறது.

இந்நிலையில் துபாயில் இசைநிகழ்ச்சி ஒன்று இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது குழந்தையுடன் துபாய் சென்றார் சித்ரா. சித்ராவுடன் பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், சாதனா சர்க்கம், நரேஷ் ஐயர், பென்னி தயால், விஜய் பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரஹினா உள்ளிட்ட பலர் சென்றனர். இவர்கள் அனைவரும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை பாட இருக்கின்றனர். துபாயின் எமிரேட்ஸ் ஹில்ஸில் உள்ள பிரபல இந்திய தொழிலதிபர் திலீப் ரவுலான் என்பவர் வீட்டில் சித்ரா தனது குழந்தையுடன் தங்கியிருந்தார்.

சித்ராவின் மகள் நந்தனா வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா விதமாக அங்கிருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுந்தார். இதனையடுத்து உடனடியாக குழந்தை நந்தனாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் நந்தனா இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 15வருடமாக தவமிருந்து பெற்ற மகள் இப்போது கண்முன் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார் சித்ரா.

சிறுமி நந்தனாவின் உடல் இன்று காலை விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் சாலிகிராமத்தில் உள்ள சித்ராவின் வீட்டுக்கு உடலைக் கொண்டு வந்தனர். இதையடுத்து திரையுலகை சேர்ந்தவர்கள்  குழந்தையின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னணி பாடகிகள் பி.சுசீலா, எஸ்.ஜானகி, பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ உள்ளிட்டோர் கண்ணீர் விட்டு அழுதபடி அஞ்சலி செலுத்தினர்.

Advertisement
கருத்துகள் (460) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (460)

Swagatha - chennai,இந்தியா
26 ஜூலை, 2012 - 22:24 Report Abuse
 Swagatha could not control the tears...my heart is paining.
Rate this:
கண்ணன் - Madurai,இந்தியா
21 ஏப், 2011 - 17:34 Report Abuse
 கண்ணன் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை சித்ராம்மா.. lets see still what are all god is going to do? ஆழ்ந்த அனுதாபங்கள்...
Rate this:
Nivethitha - Coimbatore,இந்தியா
18 ஏப், 2011 - 18:52 Report Abuse
 Nivethitha Let her sole rest in peace.......
Rate this:
revathiganeshkumar - adyar,இந்தியா
18 ஏப், 2011 - 17:29 Report Abuse
 revathiganeshkumar கண்டிப்பாக வார்த்தைகளே இல்லை ஆறுதல் சொல்ல. துக்கம் நெஞ்சை அடைக்கிறது.
Rate this:
thaani - toronto,கனடா
18 ஏப், 2011 - 04:14 Report Abuse
 thaani சித்ரா அம்மாவுக்கு எமது அனுதாபங்கள் ஆண்டவன் அருள் துணை தருவான்
Rate this:
மேலும் 455 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in