பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் பிரபாஸ் இன்று(அக்டோபர் 23) தனது பிறந்தநாளை உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றார். பல்வேறு சூப்பர் ஹிட் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ள பிரபாஸ் இறுதியாக நடித்த பாகுபலி திரைப்படத்தின் இமாலய வெற்றி அவரை இந்திய அளவில் பிரபல நடிகராக உயர்த்தி விட்டது. தற்போது பிரபாஸ் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக தன்னை தயார் செய்து வருகின்றார்.இன்று பிறந்தநாள் காணும் பிரபாஸிற்கு அவரது ரசிகர்களும் நண்பர்களும் சமூக வலைதளங்கள் வழியாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கு திரை உலகில் வளர்ந்து வரும் நடிகர் சர்வானந்த் தனது எக்ஸ்பிரஸ் ராஜா படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரில் பிரபாஸிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் எக்ஸ்பிரஸ் ராஜா படத்தை இயக்குனர் காந்தி இயக்குகின்றார். நடிகை சுரபி சர்வானந்த்திற்கு ஜோடியாக நடிக்கின்றார். வழக்கமான யுவி கிரியேஷன்ஷ் பட போஸ்டர்களைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் ராஜா பட பஸ்ட் லுக் போஸ்டரில் கூடுதலாக பிரபாஸிற்கு பிறந்த நாள் வாழ்த்தும் விஜயதசமி வாழ்த்துக்களும் இடம் பெற்றுள்ளன.