மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
ராஜாராணி படத்தை அடுத்து அட்லீ இயக்கும் படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்துக்கு முதலில் மூன்று முகம் என்ற தலைப்பு பரிசீலிக்கப்பட்டதாகவும், அந்த டைட்டிலை சத்யா மூவிஸ் நிறுவனம் தர மறுத்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது. பின்னர் காக்கி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தீபாவளி அன்று காக்கி என்ற தலைப்பை அதிகாரபூர்வமாக அறிவிப்பதோடு, அப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ஜெயப்பிரகாஷ், கத்துக்குட்டி படத்தில் மாவட்டமாக நடித்த ஞானவேலு இருவரும் ஜி.ஜே சினிமா படநிறுவனம் சார்பில் 2005 ஆம் ஆண்டில் தயாரித்த படம்தான் - காக்கி.
சரத்குமார் ஹீரோவாக நடிக்க, நமீதா நாயகி நடிக்க, வின்சென்ட் செல்வா இயக்கத்தில் எடுக்கப்பட்ட காக்கி படம் 2007 ஆம் ஆண்டு டிராப்பானது. அதுமட்டுமல்ல, காக்கி என்ற தலைப்பை ரினீவல் செய்யவும் தவறிவிட்டனர். எனவே வாய்மை படத்தை இயக்கி வரும் செந்தில்குமார் என்பவர் அந்த தலைப்பை பதிவு செய்துவிட்டதோடு, விஜய் ஆண்டனியை வைத்து காக்கி படத்தை இயக்க திட்டமிட்டு வருகிறார்.
இந்நிலையில் விஜய் படத்துக்கு காக்கி என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. காக்கி என்ற தலைப்பை அவரிடம் கேட்டுள்ளனர். அவரோ தர மறுத்துவிட்டாராம்.