'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'மைனா', 'சாட்டை', 'கும்கி' ஆகிய படங்களை தயாரித்த 'ஷாலோம் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்துள்ள படம் 'சவுகார்பேட்டை'. ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி ஜோடியாக நடித்துள்ள இப்படத்தின் கதை எழுதி இயக்கியிருப்பவர் வி.சி.வடிவுடையான். கரண் நடிப்பில் உருவாகி வரும் 'கன்னியும் காளையும் செம காதல்' படத்தை இயக்கியவர் இவர். 'சவுகார்பேட்டை' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் புதிய தகவல் ஒன்று சொல்லப்பட்டது. அதைச் சொன்னவர் வேறு யாருமல்ல, சவுகார்பேட்டை படத்தின் ஹீரோவான ஸ்ரீகாந்த்.
“சவுகார்பேட்டை படம் பேய் படம் என்பதால் மேக்-அப்பிற்கு நிறைய நேரம் எடுத்துக் கொண்டும், நிஜ சுடு காட்டில் நடித்ததும் புது அனுபவமாக இருந்தது.” என்ற ஸ்ரீகாந்த், படத்தின் நாயகியான ராய் லட்சுமி என்கிற லட்சுமிராய் பற்றி சொல்லும்போது புதிய தகவல் ஒன்றைச்சொன்னார். “இப்படத்தில் எனக்கு ஜோடியாக நடித்திருக்கும் ராய் லட்சுமி ரொம்பவும் சின்சியரான ஆர்டிஸ்ட்! அவர் ஏற்கெனவே சில ஹாரர் படங்களில் நடித்துள்ளார். ஆனால் எனக்கு இது முதல் படம். ராய் லட்சுமி மேக்-அப் விஷயத்தில் கூட ரொம்பவும் எக்ஸ்பர்ட்! அவருக்கான மேக்-அப் விஷயங்களே அவரே கவனித்துக் கொள்வார்! அத்துடன் சக நடிகர்களின் மேக்-அப் விஷயங்களில் கூட அவர் நிறைய உதவிகளை செய்வார். அந்த வகையில் எனக்கு கூட அவர் மேக்-அப் போட்டுவிட்டார்!” என்று லட்சுமி ராய் பற்றி சிலாகித்தார் ஸ்ரீகாந்த்.