தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த 2012ல் இந்தியில் நடிகர் ஜான் ஆப்ரஹாம் தயாரித்த படம் தான் 'விக்கி டோனர்'. இந்தப்படத்தின் கான்செப்ட் மலையாள நடிகர் திலீப்பை ரொம்பவே கவர்ந்ததால் பின்னாளில் ரீமேக் செய்து நடிக்கலாம் என அதன் மலையாள ரீமேக் ரைட்ஸை வாங்கி வைத்திருக்கிறார். ஆனால் இன்னும் அதற்கான ரீமேக் வேலையை தொடங்கியபாட்டைத்தான் காணோம். அதற்கு திலீப்பே காரணமும் சொல்கிறார். இந்த வருடம் அவர் நடித்த தெலுங்கு ரீமேக்கான 'இவன் மரியாதராமன்' படம் அவருக்கு பாக்ஸ் ஆபிசில் மரியாதையான வெற்றியை தரவில்லையாம். இதனால் கொஞ்சகாலத்துக்கு எந்த ரீமேக்கும் வேண்டாம் என்றுதான் 'விக்கி டோனர்' படத்தை கிடப்பில் போட்டுவிட்டாராம்..
மலையாளத்தில் வெளியாகும் படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக்காகி கலக்கி கொண்டிருக்க, மற்ற மொழிப்படங்களை இங்கே ரீமேக் செய்வதில் என்ன கஷ்டம் இருக்கிறது என்றால் அதற்கான காரணமும் திலீப் கைவசம் இருக்கிறது. அதாவது மலையாளத்தில் வெளியாகும் படங்களை மற்ற மொழியினர் யாரும் இணையதளத்தில் டவுன்லோடு செய்து பார்ப்பதில்லை. ஆனால் மற்ற மொழிப்படங்களை இங்கே உள்ள மலையாளிகள் உடனடியாக டவுன்லோடு செய்து பார்த்துவிடுகின்றனர். ஒரு நல்ல படத்தை இங்கே ரீமேக் செய்யலாம் என்றால், அதான் நெட்டில் பார்த்துட்டோமே என யாரும் தியேட்டருக்கு வரமாட்டேன் என்கிறார்கள் என ரீமேக்கிற்கு குறுக்கே நிற்கும் தடை பற்றி சொல்கிறார் திலீப்.. இருந்தாலும் நல்லதொரு படம் தன்னை தேடிவரும்போது மீண்டும் ரீமேக்கில் நடிப்பதில் தனக்கு தயக்கம் இல்லை என்கிறார் திலீப்.