ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிரித்தால் ரசிப்பேன், செங்காத்து பூமியிலே, எப்போதும் வென்றான், வெளுத்துக்கட்டு, பேரழகி, டூரிங் டாக்கீஸ் உள்பட பல படங்களில் நடித்தவர் சுனு லட்சுமி. அவர் நடித்த எந்தப் படமும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் இப்போது சூதுவாது என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அவருக்கு ஜோடியாக புதுமுகம் சந்தோஷ் சரவணன் நடிக்கிறார், நண்டு ஜெகன், கோவை சரளா, செண்ட்ராயன், நான்கடவுள் ராஜேந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். நான்தான் பாலா படத்தை இயக்கிய கண்ணன் ராஜமாணிக்கம் இயக்குகிறார். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்கிறார், சந்திரஜித் இசை அமைக்கிறார்.
"அழகான கிராமத்து காதல் கதை. சூதுவாது அறியாத மனிதர்களின் கதை. கிராமத்து கதைக்கு பொருத்தமான முகத்தை கொண்டவர் என்பதால் சுனு லட்சுமியை நடிக்க வைக்கிறோம். அவருக்கு இந்த படம் முக்கியமான படமாக இருக்கும். அம்பா சமுத்திரம், குற்றாலம், திருநெல்வேலி, சுந்தரபாண்டிபுரம், போன்ற இடங்களில் படபிடிப்பு நடைபெற்றுள்ளது. கேரளாவில் உள்ள கும்பா உருட்டி அருவியும், அம்பா சமுத்திரத்தில் உருவாக்கப்பட்ட காவல் நிலையமும் படம் முழுவதும் வருவதால் இந்த இரு இடங்களும் படத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன" என்கிறார் இயக்குனர். கண்ணன் ராஜமாணிக்கம்.