Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பார்த்திபன் இடத்தை யாரும் தொட முடியாது! - மன்சூரலிகான்

20 அக், 2015 - 14:34 IST
எழுத்தின் அளவு:
No-one-can-reach--Parthiban-place-says-Manoor-Alikhan

விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் மன்சூரலிகான். பின்னர் வில்லன் வேடத்தை தொடர்ந்து அவர் நாயகன், காமெடியன் என பலதரப்பட்ட வேடங்களில் சமீபகாலமாக நடித்து வருகிறார். அந்த வகையில், விஜயசேதுபதி நடித்துள்ள நானும் ரவுடிதான் படத்தில் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார் மன்சூரலிகான்.


இதுபற்றி அவர் கூறும்போது, இந்த படத்தில் நான் ஒரு புதுமாதிரியான வேடத்தில் நடித்திருக்கிறேன். கதைப்படி, பார்த்திபனை கிண்டல் செய்வதுபோன்று எனக்கு ஒரு காட்சி கிடைத்தது. எல்லோரையும் கேலி கிண்டல் செய்யக்கூடியவர் பார்த்திபன். நாம் அவரையே கலாய்க்கப் போகிறோம் என்கிற சந்தோசத்துடன் நடித்தேன்.


ஆனால், அந்த காட்சி முடிவில் பார்த்தால் பார்த்திபன் என்னை கிண்டல் செய்து விட்டார். அது பார்த்திபனுக்கு கைவந்த கலை. அவர் இடத்தை யாரும் தொட முடியாது என்று சொல்லும் மன்சூரலிகான், என்னைப்பொறுத்தவரை பார்த்திபன் ஒரு புதுமையான நடிகர். அவர் புதிய பாதையில் நடித்தபோது அவரது நடிப்பையும் அந்த படத்தின் கதையையும் பார்த்து வியந்திருக்கிறேன். அந்தசமயத்தில் ஹீரோக்கள் எல்லை தாண்டமாட்டார்கள். ஹீரோ என்றால் இந்த மாதிரிதான் நடிக்க வேண்டும் என்றிருந்த இமேஜை உடைத்தவர் பார்த்திபன். அப்படிப்பட்ட பார்த்திபனுடன் நடித்தது எனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது என்கிறார் மன்சூரலிகான்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in