'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
இந்திய சினிமா சரித்திரத்தில் பல சாதனைகளை படைத்த பாகுபலி அடுத்ததாக சின்னத்திரையிலும் மகத்தான சாதனைகளை படைத்து வருகிறது. கடந்த 4ந் தேதி மனோரமா சேனலில் பாகுபலி ஒளிபரப்பான பிறகு அந்த சேனல் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் நம்பர் ஒன் இடத்துக்கு வந்து விட்டது.
அடுத்து வருகிற 25ந் தேதி தெலுங்கில் மா டி.வியில் ஒளிபரப்பாகிறது. பாகுபலி ஒளிபரப்பாகும்போது அதில விளம்பரம் செய்ய வியாபாரம், மற்றும் தொழில் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இரண்டே முக்கால் மணி நேர படத்தை 4 மணி நேரம் ஒளிபரப்பி விளம்பர பணத்தை கோடிக் கணக்கில் அள்ளியது மனோரமா டி.வி. அதேபோல மா டிவியும் அள்ள இருக்கிறது. அதுவும் பாகுபலியின் ஒரிஜினல் மொழியான தெலுங்கில் ஒளிபரப்பாவதால் விளம்பர கட்டணத்தை கணிசமாக உயர்த்திவிட்டது. 10 நொடி விளம்பரத்திற்கு 2.5 லட்சம் என்று கட்டணம் நிர்ணயித்திருக்கிறது. ஒரு விளம்பரம் சராசரியாக 20 நொடிகள் இருக்கும். 20 நொடி விளம்பரத்தை ஒருமுறை ஒளிபரப்ப 5 லட்சம் கட்டணம். இந்திய தொலைக்காட்சிகளின் வரலாற்றில் இதுவே உச்சபட்சமான விளம்பர கட்டணம் என்கிறார்கள்.