பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய கடைசி படம் தலைமுறைகள். அந்த படத்துக்கு பிறகு தனது சினிமா பட்டறையின் சார்பில் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான நடிகர் நடிகைகளை தேர்வு செய்து வைத்திருந்தார். அவர் ஹீரோவாக தேர்வு செய்து வைத்திருந்தது கிஷன் என்பவரை. இதற்காக மொட்டை அடித்து தனி போட்டோ செஷனே நடத்தி உள்ளார்.
கிஷன் பிரபல பிடில் இசை கலைஞர் விக்கு விநாயகம், பத்திரிகையாளர் சோ ஆகியோரின் நெருங்கிய உறவினர். பாலுமகேந்திராவின் திடீர் மறைவால் கிஷன் ஹீரோவாக முடியவில்லை. "நாடகங்களில் நடித்து வந்தேன். பலே பாண்டியா படத்தில் விஷ்ணு நன்பராக அறிமுகமானேன். அதன் பிறகு தெய்வதிருமகள் படத்தில் விக்ரமிற்கும், முதல் இடம் படத்தில் விதார்த்துக்கும், திருமணம் என்னும் நிக்காஹ் படத்தில ஜெய்க்கும் நண்பராக நடித்தேன். இந்த நேரத்தில் பாலுமகேந்திரா சார் ஆடிசன் நடத்துவதாக கேள்விப்பட்டு கலந்து கொண்டேன். ஹீரோவாக தேர்வானேன்.
நிறைய கனவுகளோடு இருந்தேன். அவர் மறைவு என் கனவுகளை தகர்த்துவிட்டது. இருந்தாலும் தன்னம்பிக்கையோடு போராடி வருகிறேன். இப்போதும் 5 படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறேன். நிச்சயம் ஒரு நாள் ஹீரோவாகிடுவேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது" என்கிறார் கிஷன்.