Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்பு என்றாலே தாமதம் தான்.!

19 அக், 2015 - 12:37 IST
எழுத்தின் அளவு:
Simbu-means-delay

சிம்புவுக்கும், தாமதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கடந்த பல வருடங்களாகவே தன்னுடைய படப்பிடிப்பிற்குக் கூட சிம்பு சரியான நேரத்தில் போக மாட்டார் என்ற ஒரு தகவல் கோலிவுட்டில் இருக்கிறது. இப்போதும் கூட அவர் சொன்ன நேரத்தைக் கடைபிடிக்க மாட்டார் என்றே திரையுலகத்தில் உள்ளவர்கள் சொல்வார்கள். அவர் தாமதமாக வருவதால்தான் அவருடைய படங்கள் திட்டமிட்டபடி முடிவடைவதில்லை என்ற குற்றச்சாட்டும் தயாரிப்பாளர்களிடம் உண்டு. சிம்புவை வைத்து படம் தயாரிக்கவே பலர் அஞ்சுகிறார்கள் என்பதுதான் உண்மை.


சமீபத்தில் கூட செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உருவாகி வந்த 'கான்' திரைப்படம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. சிம்பு நடித்துள்ள 'இது நம்ம ஆளு', நீண்ட நாள் கிடப்பில் இருக்கும் 'வேட்டை மன்னன்' ஆகிய படங்கள் எப்போது வரும் என்று சொல்ல முடியாத நிலைமையே உள்ளது.


சிம்புவின் படங்களுக்குத்தான் இந்த நிலை என்று பார்த்தால் நேற்று நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலிலும் சிம்புவின் தாமதமான ராசி நிறையவே வேலை செய்தது. நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் நள்ளிரவில் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால், துணைத் தலைவர்களுக்கான முடிவுகள் அறிவிப்பதில் நீண்ட தாமதம் ஏற்பட்டது. தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள், 'சிம்பு எங்கெல்லாம் இருக்கிறாரோ, அங்கெல்லாம் தாமதம் இருக்கும்' என்ற ரீதியில் சமூக வலைத்தளங்களில் கமெண்ட்டுகளை அடிக்க ஆரம்பித்தார்கள்.


கடைசியில் 'சிம்பு தோல்வி' என்று தெரிந்த பிறகே பலர் 'குட் நைட்' சொல்லிவிட்டு நிம்மதியாக தூங்கச் சென்றார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in