மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சசிகுமார் இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் படத்தில் நடித்தவர் ஸ்வாதி. அதன்பிறகு சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்த போராளி படத்தில் நடித்தவர், இதற்குதானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் சிட்டி கேர்ளாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் தனது முதல் பட நாயகனான ஜெய்யுடன் வடகறி படத்தில் நடித்தார். இந்நிலையில், தற்போது யாக்கை, திரி, அமளி துமளி, திரிபுரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஸ்வாதி.
இதில் திரிபுரா என்ற படம் தெலுங்கில் தயாராகியுள்ளது. ஆனால் தமிழில் திரிபுரசுந்தரி என்ற பெயரில் வெளியாகிறது. பேய் கதையில் உருவாகும் இந்த படத்தில் அதிரடியான நடிகையாக உருவெடுத்துள்ளாராம் ஸ்வாதி. அதோடு இதுவரை ஹீரோக்களை நம்பி களமிறங்கி வந்த அவர், இந்த படத்தில் லீடு ரோலில் நடித்திருக்கிறார். சமீபகாலமாக நயன்தாரா, த்ரிஷா என்று பல நடிகைகள் பேய் கதைகளில் நடித்து வருவதைப் பார்த்து தனது ரூட்டையும் மாற்றியுள்ள ஸ்வாதி, அந்த படம் வெற்றி பெற்றால் அதன்பிறகு தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளுக்கே முதலிடம் கொடுப்பாராம்.