இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்பாக நடைபெற்றுவரும் சூழ்நிலையில், இன்று காலை 7 மணி 40 நிமிடத்துக்கு வாக்களிக்க வந்தார் ரஜினி. வாக்களித்துவிட்டு வந்த ரஜினி, தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். ரஜினி கூறிய கருத்துக்கு நடிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், ரஜினியின் கருத்து விஷால் அணிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்பட்டது.
விஷால் ரெட்டி என்று எதிர் அணியினரால் சொல்லப்பட்டதன் மூலம் விஷால் தமிழர் கிடையாது... அவர் தெலுங்குக்காரர் என்ற கருத்து உருவாக்கப்பட்டது. அதனால் தமிழ்நாடு நடிகர் சங்கம் என்ற வாதம் விஷாலுக்கு எதிரான விஷயமாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று ரஜினி சொன்ன கருத்துக்கு நடிகர் டெல்லி கணேஷ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
நீங்க சொல்ற மாதிரி தமிழ்நாடு நடிகர் சங்கம்னு பேரை மாத்திடுறோம். அதில் தமிழர் மட்டும்தான் உறுப்பினராக இருக்கணும்னு சொன்னால் என்ன பண்ணுவீங்க அதைவிட, நீங்க எடுக்கிற படங்கள்ல தமிழர்கள் மட்டும்தான்னு நடிக்கணும்னு சொன்னால் நீங்க ஏத்துப்பீங்களா? உங்கள் படத்துக்கு நடிகைகளை எங்கேரந்து அழைச்சுட்டு வர்றீங்க? என்று சரமாரியாக கேள்விகளை அடுக்கி உள்ளார்.