Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

புது படம் பரத்துக்கு கை கொடுக்குமா..?

17 அக், 2015 - 08:22 IST
எழுத்தின் அளவு:
Will-new-film-help-Bharath

பரத்திற்கு தமிழில் 'சிம்பா' மற்றும் 'என்னோடு விளையாடு' என இரண்டு படங்களே கைவசம் உள்ளன. இதில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தாலும் இன்னொரு பக்கம் தனது கவனத்தை மலையாள திரையுலகை நோக்கியும் செலுத்த துவங்கியுள்ளார். பத்து வருடங்களுக்கு முன் ஜெயராஜ் இயக்கிய 'பார் தி பீப்பிள்' படத்தின் மூலம் கேரளாவில் வலுவான அடித்தளம் போட்டுவைத்த பரத், கடந்த வருடம் வெளியான 'கூதர' படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்தார். இருந்தாலும் அந்தப்படம் பேர் சொல்லும் அளவுக்கு வெற்றிபெறவில்லை.

தற்போது அனில் ராதாகிருஷ்ணன் மேனனின் இயக்கத்தில் உருவாகும் 'லார்ட் லிவிங்க்ஸ்டன் 7௦௦௦ கண்டி'.. சுருக்கமாக 'எல்.எல்.7.கே' படத்தில் நடித்துள்ளார் பரத். மலையாளப்படம் என்றாலும் இதில் பரத் பேசுவது எல்லாமே தமிழில் தானாம். காரணம் காடுகள், மலைப்பகுதிகளுக்கு சென்று சாகசம் செய்வதில் ஆர்வலரான பரத் சென்னையில் இருந்து கேரளா வனப்பகுதிகளுக்கு செல்கிறார். படத்தின் மேக்கிங் காட்சிகளை பார்க்கும்போது ரசிகர்களுக்கு சரியான விஷுவல் ட்ரீட் காத்திருக்கிறது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. மலையாளத்தில் வெளியாகியுள்ள இந்தப்படம் பரத்துக்கு அங்கே வலுவான ரீ-என்ட்ரி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in