இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ்சினிமாவில் உள்ள காமெடி பீஸுகளை தலயாக சித்தரித்து படம் எடுக்கும் வழக்கம் தொடங்கி இருக்கிறது.
ரோமியோ ஜூலியட் படத்தில் டி.ராஜேந்தரின் ரசிகராக நடித்தார் ஜெயம் ரவி.
அதோடு, எங்க தல எங்க தல டி.ஆர். என்று டி.ராஜேந்தரைப் பற்றி ஒரு பாடலையும் படத்தில் வைத்தனர்.
தன்னை புகழ்ந்து பாடல் வைத்திருப்பதையே புரிந்து கொள்ளாமல் அந்தப் படத்துக்கு தடை விதிக்கும்படி கோர்ட்டுக்குப் போனார் டி.ராஜேந்தர்.
ரோமியோ ஜூலியட் படத்தில் டி.ராஜேந்தரின் ரசிகராக ஜெயம் ரவி நடித்ததுபோல், புரூஸ்லீ படத்தில் நடிகர் மன்சூர் அலிகானின் ரசிகராக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார்.
டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா என இரண்டே படங்களில் நடித்தநிலையில் இளைஞர்களின் இதயங்களில் இடம்பிடித்துவிட்டார் ஜி.வி.பிரகாஷ்.
அவர் தற்போது 'கெட்ட பையன் இந்த கார்த்தி', 'புரூஸ் லீ' ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
'நாளைய இயக்குனர் சீஸன் 4'ல் பங்குபெற்ற பிரசாந்த் 'புரூஸ் லீ' படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக, தெலுங்கு நடிகை கீர்த்தி கர்பந்தா நடிக்கிறார்.
பயந்த சுபாவமுள்ள இளைஞன் ஒருவன் தன்னை புரூஸ் லீ போல் நினைத்துக் கொண்டு செய்யும் சேட்டைகள்தான் 'புரூஸ் லீ'படத்தின் கதை.
இப்படத்தில் மன்சூர் அலிகானின் ரசிகராக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ், அவருக்கு கட்-அவுட் வைப்பது, பாலாபிஷேகம் எல்லாம் செய்கிறாராம்.