ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகராக இருந்து இயக்குனராக மாறிய மலையாள நடிகர் நாதிர்ஷா தனது நண்பரான பிருத்விராஜை வைத்து இயக்கியுள்ள படம் தான் 'அமர் அக்பர் ஆண்டனி'.. அடுத்த வாரம் வெளியாக இருக்கும் இதில் பிருத்விராஜுடன் இந்திரஜித் ஜெயசூர்யா இருவரும் நடித்துள்ளார்கள். கதாநாயகியாக நமீதா பிரமோத் நடித்துள்ளார்.. இந்தப்படத்தின் பாடலையும் டிரைலரையும் இரண்டு தினங்களுக்கு முன்புதான் வெளியிட்டார்கள். அதில் ஒரு பாடலில் நமீதா பிரமோத்தை இம்ப்ரெஸ் பண்ணுவதற்காக இந்த மூன்று ஹீரோக்களும் படும் (பாடும்)பாட்டை ஜாலியாக படமாக்கியுள்ளார்கள்.
குறிப்பாக நமீதாவை பார்த்து மலையாளத்தில் டூயட் பாட ஆரம்பிக்கும் பிருத்விராஜ், அருகில் அமர்ந்திருக்கும் இந்திரஜித்தையும், ஜெயசூர்யாவையும் டூயட் பாடுற இடத்துல உங்களுக்கு என்ன வேலை என விரட்டிவிட்டு பாட்டு பாடுவார். கொஞ்ச நேரம் கழித்து இந்தி நடிகர் போல அசத்தலான காஸ்ட்யூமுடன் என்ட்ரி ஆகும் இந்திரஜித், தனது பங்கிற்கு இந்தியில் பாடி இம்ப்ரெஸ் பண்ண முயற்சிப்பார். கொஞ்ச நேரத்திலேயே ஜெயசூர்யா என்ட்ரி கொடுத்து அவர் பங்கிற்கு தமிழில் பாடுவார். இதில் ஜெயசூர்யா கட்டைக்காலுடன் மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.