ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார், 'கோ' படத்தை தயாரித்தார். அதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது கோ 2 படத்தை தயாரித்து வருகிறார். இதில் பாபிசிம்ஹா, பிரகாஷ்ராஜ், நிக்கி கல்ராணி, நடிக்கிறார்கள். புதுமுகம் சரத் இயக்குகிறார். லியான் ஜேம்ஸ் இசை அமைக்கிறார். இதன் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்ற "கண்ணம்மா..." என்ற பாடல் ஹிட்டாகி உள்ளது. இந்தப் பாடலை பாடியிருப்பவர் பிரபல இந்தி இரட்டை இசை அமைப்பாளர்களான சலீம்-சுலைமான் மெர்செண்ட்டில் சலீம் பாடியிருக்கிறார்.
இதுகுறித்து இசைஅமைப்பாளர் லியான் ஜேம்ஸ் கூறியதாவது: கண்ணம்மா... பாடலின் மெட்டை அமைக்கும் போதே இந்த பாடலை சலீம் பாடினால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன் . என் எண்ணத்தை தயாரிப்பாளர் எல்ரெட் குமாரிடம் தெரிவித்தேன், அவரும் சற்றும் தயங்காமல் , பாடல்கள் தான் மக்களுக்கு படம் பார்க்கும் ஆவலை தூண்டும் . ஆகவே இந்தப் பாடல் வெற்றி பெறும் என்றால் யாரை வேண்டுமானால் அழைத்து கொள்ளுங்கள் என்றார். நானும் பாடல் வரிகளுடன் மெட்டையும் மின்னஞ்சல் வழியாக சலீமுக்கு அனுப்பினேன். அவரும் உடனடியாக எப்போது பதிவு செய்யலாம் எனக் கேட்டதோடு வந்து பாடியும் கொடுத்தார்.
பாடல் பதிவின் போது அவரோடு செலவிட்ட அந்த சில மணி நேரங்கள் என் வாழ்வில் மறக்க முடியாது , நிறைய கற்றுக் கொண்டேன். இன்று கண்ணம்மா பாடல் இந்த அளவுக்கு வெற்றிப் பெற்றதற்கு அவர் தான் காரணம் என்கிறார் லியான் ஜேம்ஸ்.